ஈரானில் 9 பாகிஸ்தான் தொழிலாளர்கள் சுட்டுக்கொலை

January 29, 2024

பாகிஸ்தானைச் சேர்ந்த 9 தொழிலாளர்கள் ஈரானில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஈரான் நாட்டில் உள்ள சிஸ்தான்-பலுசிஸ்தான் மாகாணத்தில், அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு ஒன்றில், பாகிஸ்தான் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். கிட்டத்தட்ட 9 பாகிஸ்தானியர்கள் துப்பாக்கிச் சூட்டில் பலியானதாக ஈரான் நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வுக்கு பாகிஸ்தான் நாடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஈரான் நாடு, துப்பாக்கிச் சூடு தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என பாகிஸ்தான் […]

பாகிஸ்தானைச் சேர்ந்த 9 தொழிலாளர்கள் ஈரானில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

ஈரான் நாட்டில் உள்ள சிஸ்தான்-பலுசிஸ்தான் மாகாணத்தில், அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு ஒன்றில், பாகிஸ்தான் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். கிட்டத்தட்ட 9 பாகிஸ்தானியர்கள் துப்பாக்கிச் சூட்டில் பலியானதாக ஈரான் நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வுக்கு பாகிஸ்தான் நாடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஈரான் நாடு, துப்பாக்கிச் சூடு தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தி உள்ளது. அண்மையில், ஈரான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த துப்பாக்கி சூடு சம்பவம் இருநாட்டினருக்கு இடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu