பாகிஸ்தானில் உள்ள 40% மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த நிதி ஆண்டில் மட்டும் பாகிஸ்தானின் வறுமை விகிதம் 39.4% ஆக உயர்ந்துள்ளது. அதன்படி, 12.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் சென்றள்ளனர். தற்போதைய நிலையில், மொத்தம் 95 மில்லியன் பாகிஸ்தானியர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர். இந்த தகவலை உலக வங்கி தெரிவித்துள்ளது. மேலும், பாகிஸ்தான் அரசு உடனடியாக நிதி நிலையை சீரமைக்கும் திட்டத்தில் களமிறங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. குறிப்பாக, வரி மற்றும் ஜிடிபி விகிதத்தை 5% ஆக உயர்த்த பரிந்துரைத்துள்ளது. மேலும், செலவுகள் மற்றும் ஜிடிபி விகிதத்தை 2.7 ஆக குறைக்க வலியுறுத்தி உள்ளது.