பாகிஸ்தானில் 68% வீழ்ச்சி அடைந்த வாகன விற்பனை

December 19, 2023

பாகிஸ்தானில் வாகன விற்பனையில் 68% வீழ்ச்சி பதிவாகியுள்ளது. பாகிஸ்தானில் தொடர்ச்சியாக 2 மாதங்களாக வாகன விற்பனையில் சரிவு காணப்பட்டு வருகிறது. கடந்த நவம்பர் மாதத்தில், ஒட்டுமொத்த பாகிஸ்தானிலும் வெறும் 4875 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 68% வீழ்ச்சியாகும். வாகன விற்பனை குறைந்ததற்கு, பணவீக்கம், அதிகரித்த உற்பத்தி செலவுகள், மிகவும் குறைவான தேவை, நாட்டின் பொருளாதார வீழ்ச்சி, நாணய மதிப்பு குறைவு, அதிக வாகன வரிகள் போன்ற பல்வேறு காரணங்கள் கூறப்பட்டுள்ளன. பாகிஸ்தானில் […]

பாகிஸ்தானில் வாகன விற்பனையில் 68% வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

பாகிஸ்தானில் தொடர்ச்சியாக 2 மாதங்களாக வாகன விற்பனையில் சரிவு காணப்பட்டு வருகிறது. கடந்த நவம்பர் மாதத்தில், ஒட்டுமொத்த பாகிஸ்தானிலும் வெறும் 4875 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 68% வீழ்ச்சியாகும். வாகன விற்பனை குறைந்ததற்கு, பணவீக்கம், அதிகரித்த உற்பத்தி செலவுகள், மிகவும் குறைவான தேவை, நாட்டின் பொருளாதார வீழ்ச்சி, நாணய மதிப்பு குறைவு, அதிக வாகன வரிகள் போன்ற பல்வேறு காரணங்கள் கூறப்பட்டுள்ளன. பாகிஸ்தானில் விற்பனை குறைந்துள்ள அதே சமயத்தில், இந்தியாவில் வாகன விற்பனையில் புதிய உயரங்கள் எட்டப்பட்டு வருகின்றன. கடந்த நவம்பர் மாதத்தில் மட்டுமே, 3.6 லட்சம் வாகனங்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu