ரஷ்யாவிடம் இருந்து, சலுகை விலையில் கச்சா எண்ணெயை பெறுவதற்கான ஒப்பந்தத்தில், பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது. இந்த புதிய ஒப்பந்தத்தின் படி, பாகிஸ்தான் தனது முதல் ஆர்டரை பதிவு செய்துள்ளது. அதன்படி, வரும் மே மாதம், கராச்சி துறைமுகத்திற்கு, சலுகை விலை கச்சா எண்ணெய்கள் வந்திறங்கும் என பாகிஸ்தான் பெட்ரோலியத்துறை அமைச்சர் முஸ்தாக் மாலிக் தெரிவித்துள்ளார். மேலும், இந்த முதல் பரிமாற்றம் சுமூகமாக நடைபெறும் பட்சத்தில், நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பேரல் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
மேலும், இந்த ஒப்பந்தத்தின் படி, கச்சா எண்ணெய் மட்டுமே சலுகை விலையில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுத்தீகரிக்கப்பட்ட எண்ணெய் இறக்குமதி செய்யப்பட மாட்டாது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ரஷ்யாவின் எரிசக்தி துறை அமைச்சர் நிக்கோலே சுல்கிநோவ் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.