பாகிஸ்தான் பணவீக்கம் 35.4% ஆக உயர்வு - 1965 க்கு பிறகு புதிய உச்சம்

April 3, 2023

பாகிஸ்தான் நாட்டின் பணவீக்கம், கடந்த 1965 ஆம் ஆண்டுக்குப் பிறகு, புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில், பாகிஸ்தானின் பணவீக்கம் 35.4% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, உணவுப் பொருட்கள், மின்சாரம், போக்குவரத்து போன்ற துறைகளில் அதிக விலை உயர்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிலும் உச்சமாக, மதுபானங்கள் மற்றும் புகையிலை சார்ந்த பொருட்களின் விலைகள் 140% உயர்வை பதிவு செய்துள்ளன. சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளைப் பெற முடியாமல் போனதால், இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக […]

பாகிஸ்தான் நாட்டின் பணவீக்கம், கடந்த 1965 ஆம் ஆண்டுக்குப் பிறகு, புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில், பாகிஸ்தானின் பணவீக்கம் 35.4% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, உணவுப் பொருட்கள், மின்சாரம், போக்குவரத்து போன்ற துறைகளில் அதிக விலை உயர்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிலும் உச்சமாக, மதுபானங்கள் மற்றும் புகையிலை சார்ந்த பொருட்களின் விலைகள் 140% உயர்வை பதிவு செய்துள்ளன. சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளைப் பெற முடியாமல் போனதால், இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மாதாந்திர அடிப்படையில், பாகிஸ்தானின் பணவீக்கம் 3.7% உயர்வை பதிவு செய்துள்ளது. முந்தைய மாதத்தில் இது 4.3% ஆக இருந்தது. எனவே, மாதாந்திர அடிப்படையில் விலை உயர்வு சற்று குறைந்துள்ளது. நகர்புறங்களில் 33% மற்றும் கிராமப்புறங்களில் 38.9% என்ற அளவில் பணவீக்கம் பதிவாகி உள்ளது. வரலாறு காணாத இந்த பணவீக்கத்தால். பாகிஸ்தான் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பொதுமக்கள் இலவசங்களை நாடி சென்றதால், கடந்த வாரம் உயிரிழப்புகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu