பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ கணக்குகள் இந்தியாவில் முடக்கம்

இந்தியாவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. பஹல்காம் பகுதியில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அரசு பல்வேறு வகையான கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக, பாகிஸ்தானைச் சேர்ந்த பலர் இயக்கும் எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பக்கங்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அதாவுல்லா தாரரின் எக்ஸ் கணக்கும் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணமாக, அவர் சமீபத்தில் வெளியிட்ட […]

இந்தியாவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.

பஹல்காம் பகுதியில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அரசு பல்வேறு வகையான கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக, பாகிஸ்தானைச் சேர்ந்த பலர் இயக்கும் எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பக்கங்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அதாவுல்லா தாரரின் எக்ஸ் கணக்கும் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணமாக, அவர் சமீபத்தில் வெளியிட்ட விவாதத்திற்குரிய கருத்துகள் குறிப்பிடப்படுகின்றன. குறிப்பாக, இந்தியா பாகிஸ்தான் மீது அடுத்த 36 மணி நேரத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக பாகிஸ்தான் உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளதாக அவர் இரண்டு நாட்களுக்கு முன்பு பதிவு செய்திருந்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu