பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு - வரலாற்றுச் சரிவு

April 4, 2023

பாகிஸ்தானிய ரூபாயின் மதிப்பு இன்று வரலாற்று சரிவை பதிவு செய்துள்ளது. இந்நிலையில், கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் நாட்டிற்கு, சர்வதேச நாணய நிதியத்தின் நிதியும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கராச்சியில் உள்ள அந்நிய நாணய பரிவர்த்தனை அமைப்பு அளித்த தகவல்கள் படி, பாகிஸ்தானிய ரூபாயின் மதிப்பு 1% சரிந்து, இன்று, டாலருக்கு நிகரான மதிப்பு 288 ஆக உள்ளது. பாகிஸ்தானில் பொதுமக்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர். ஆனால், சர்வதேச நாணய நிதியத்தின் சில […]

பாகிஸ்தானிய ரூபாயின் மதிப்பு இன்று வரலாற்று சரிவை பதிவு செய்துள்ளது. இந்நிலையில், கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் நாட்டிற்கு, சர்வதேச நாணய நிதியத்தின் நிதியும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கராச்சியில் உள்ள அந்நிய நாணய பரிவர்த்தனை அமைப்பு அளித்த தகவல்கள் படி, பாகிஸ்தானிய ரூபாயின் மதிப்பு 1% சரிந்து, இன்று, டாலருக்கு நிகரான மதிப்பு 288 ஆக உள்ளது. பாகிஸ்தானில் பொதுமக்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர். ஆனால், சர்வதேச நாணய நிதியத்தின் சில கோரிக்கைகளை பாகிஸ்தான் நிறைவேற்ற தவறியதால், நிதி உதவி மறுக்கப்பட்டுள்ளது. ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், நிதி உதவி தாமதிக்கப்பட்டு வருவது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu