இஸ்லாமாபாத், ஏப்ரல் 29, 2022:
கடந்த சில நாட்களுக்கு முன்பு, துருக்கியில், சில பாகிஸ்தானியர்கள், நேபாளியர்களைக் கடத்தியது தெரியவந்தது. டாக்ஸிம் ஸ்கொயர் பகுதியில் 6 பாகிஸ்தானியர்கள், நேபாளியர்களைத் துப்பாக்கி முனையில் கடத்தி, அவர்களைத் துன்புறுத்தியது நிரூபிக்கப்பட்டது. மேலும், 10 ஆயிரம் யூரோக்கள் அவர்கள் பணயமாகக் கேட்டதும், துருக்கிய அதிகாரிகள் விவேகமாகச் செயல்பட்டு, அவர்களைச் சிறைபிடித்தனர். மேலும், இம்ரான் கான் பதவி விலகக் கோரி போராட்டம் நடத்தியதாகவும் வேறு சில பாகிஸ்தானியர்கள் துருக்கி அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்டு உள்ளனர் என்று அரப் நியூஸ் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியான, இந்த சம்பவங்களை அடுத்து, துருக்கி அரசாங்கம், பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்குவதில் அதிகக் கெடுபிடிகளைப் புகுத்தி, நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன், பாகிஸ்தானியர்கள் அங்கு தற்காலிகமாகத் தங்குவதற்கும் தடை விதித்துள்ளது. பாகிஸ்தானியர்கள் அதிகமாக இருக்கும் நாடான துருக்கியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, குறித்து பாகிஸ்தானிய ஊடகம் ஆஜ் நியூஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது.














