பாலஸ்தீன தலைவர் அப்பாஸ் ரஷ்யா பயணம்

August 12, 2024

பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு, மத்திய கிழக்கு பிராந்தியத்தில், நீடித்த அமைதி ஏற்பட, இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பாலஸ்தீனப் பகுதிகளை விடுவித்து, அரபு மற்றும் யூத ஆகிய இரு இறையாண்மை கொண்ட நாடுகளை உருவாக்குவது அவசியம் என்று பேசியுள்ளார். ரஷ்ய அரசு ஊடகமான TASS க்கு அளித்த பேட்டியில், “1967ல் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் இருந்து இஸ்ரேல் வெளியேறுவது மற்றும் பாலஸ்தீனிய அரசின் தலைநகராக கிழக்கு ஜெருசலேமை நிறுவுவது உட்பட, இரு நாடுகளின் […]

பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு, மத்திய கிழக்கு பிராந்தியத்தில், நீடித்த அமைதி ஏற்பட, இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பாலஸ்தீனப் பகுதிகளை விடுவித்து, அரபு மற்றும் யூத ஆகிய இரு இறையாண்மை கொண்ட நாடுகளை உருவாக்குவது அவசியம் என்று பேசியுள்ளார்.

ரஷ்ய அரசு ஊடகமான TASS க்கு அளித்த பேட்டியில், “1967ல் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் இருந்து இஸ்ரேல் வெளியேறுவது மற்றும் பாலஸ்தீனிய அரசின் தலைநகராக கிழக்கு ஜெருசலேமை நிறுவுவது உட்பட, இரு நாடுகளின் தீர்வைச் செயல்படுத்துவதில் ஸ்திரத்தன்மை வேண்டும்” என்று அப்பாஸ் வலியுறுத்தினார். மேலும், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கீழ் இஸ்ரேல், தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாகவும், அமைதிக்கு தடையாகவும் உள்ளது என்று கூறினார். அத்துடன், ராணுவத்தால், காஸாவையும் மேற்குக் கரையையும் பிரிக்க முடியாது என்று நம்பிக்கை தெரிவித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu