பொதுமக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்க ஊராட்சி மணி திட்டம் என்ற திட்டத்தை முதலமைச்சர் மு. க ஸ்டாலின் விரைவில் தொடங்க இருக்கிறார்.தமிழகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பாக ஊராட்சி மணி அழைப்பு மையம் புதிதாக அமைக்கப்பட உள்ளது. இது மக்கள் தங்களது புகார்களை தெரிவிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான மைய அழைப்பு எண் 155340 என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் தொடர்பு அலுவலராக கலெக்டரின் நேர்முக உதவியாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது வரும் 26 ஆம் தேதி திறந்து வைப்பதாக இருந்த நிலையில் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டம் விரைவில் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.