கோவிட் தொற்றுநோயைவிட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான தொற்றுநோய் பரவ வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் உலக சுகாதார நிறுவனத்தின் வருடாந்திர கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரோஸ் அதானம் கேப்ரியேசஸ், கோவிட் தொற்றுநோயைவிட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான தொற்றுநோய் பரவ வாய்ப்பு உள்ளது. அது பரவாமல் தடுப்பதற்கான பேச்சுவார்த்தைக்கு உலக நாடுகள் முன்னுரிமை கொடுக்க வேண்டும். கோவிட் பெருந்தொற்று இனி உலகிற்கு அச்சுறுத்தலாக இருக்காது என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. எனினும், அந்த பெருந்தொற்று மறைந்துவிடவில்லை என்றார்.
கோவிட் தொற்று நோய் வந்தபோது அதனை எதிர்கொள்ள உலகம் தயாராக இல்லை. அது மிகப் பெரிய சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தியது என்று தெரிவித்துள்ளார்.