பப்புவா நியூ கினியாவில் 6.4 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பப்புவா நியூ கினியாவின் பங்குனா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 என பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வழங்கியுள்ளது. நிலநடுக்கம் பங்குனாவின் 57 கிமீ தெற்கில், 41 கிமீ ஆழத்தில் நிகழ்ந்தது. சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. மேலும் உயிரிழப்பு அல்லது சேதம் குறித்து அதிகாரிகளிடமிருந்து உடனடி தகவல்கள் கிடைக்கவில்லை.














