இந்தோனேஷியா: கிளர்ச்சியாளர்கள் பிடியில் நியூசிலாந்து விமானி - மீட்கும் போராட்டத்தில் 13 ராணுவத்தினர் பலி

April 18, 2023

மேற்கு பப்புவா இந்தோனேஷியா கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே, மேற்கு பப்புவாவை சேர்ந்தவர்கள், தங்களுக்கு விடுதலை வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, கிளர்ச்சி செய்து வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த இந்தோனேசியா அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம், நியூசிலாந்தைச் சேர்ந்த பிலிப் என்ற விமானியை கிளர்ச்சியாளர்கள் சிறை பிடித்தனர். “மேற்கு பப்புவாவுக்கு விடுதலை கிடைக்கும் வரை, அயல்நாட்டு விமானங்களுக்கு பணி செய்ய அனுமதி இல்லை” என்பதாக கூறி, ஆதார வீடியோ ஒன்றை வெளியிட்டனர். […]

மேற்கு பப்புவா இந்தோனேஷியா கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே, மேற்கு பப்புவாவை சேர்ந்தவர்கள், தங்களுக்கு விடுதலை வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, கிளர்ச்சி செய்து வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த இந்தோனேசியா அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம், நியூசிலாந்தைச் சேர்ந்த பிலிப் என்ற விமானியை கிளர்ச்சியாளர்கள் சிறை பிடித்தனர். “மேற்கு பப்புவாவுக்கு விடுதலை கிடைக்கும் வரை, அயல்நாட்டு விமானங்களுக்கு பணி செய்ய அனுமதி இல்லை” என்பதாக கூறி, ஆதார வீடியோ ஒன்றை வெளியிட்டனர்.

அதைத்தொடர்ந்து, விமானியை மீட்க, இந்தோனேசியா ராணுவம் பல முயற்சிகள் எடுத்தது. இந்நிலையில், முகி மாவட்டத்தில் உள்ள ராணுவத் தளவாடங்கள் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதில், 13 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும், கிளர்ச்சியாளர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், இந்த விவகாரத்தில் ஐநா சபை பாதுகாப்பு கவுன்சில் தலையிட வேண்டும் எனவும், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இந்தோனேஷியா ராணுவத்திற்கு வழங்கும் ஒத்துழைப்பை நிறுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu