வரும் ஜனவரி மாதம், சூரிய அஸ்தமனத்திற்கு பின்னர் வானில் வீனஸ், சனி, வியாழன் மற்றும் செவ்வாய் கிரகங்கள் பிரகாசமாக ஒளிரும் அரிய காட்சியை நாம் காணலாம். குறிப்பாக, ஜனவரி 17 மற்றும் 18 தேதிகளில் வெள்ளி மற்றும் சனி கிரகங்கள் மிகவும் நெருக்கமாக இணைந்து தோன்றும்.
மேலும், செவ்வாய் கிரகம் ஜனவரி 15 மற்றும் 16 தேதிகளில் பூமிக்கு மிக அருகில் வரும். இதனால், மிதுன நட்சத்திரக் கூட்டத்தில் -1.4 என்ற அளவில் மிகவும் பிரகாசமாக தெரியும். சூரியன் மறையும் போது கிழக்கில் உதித்து, சூரிய உதயத்தில் மேற்கில் அஸ்தமிக்கும். வியாழன் நம் தலைக்கு நேர் மேலே தெரியும். தென்மேற்கில் வெள்ளி மற்றும் சனி கிரகங்கள் ஒன்றாகத் தெரியும். யுரேனஸ் மற்றும் நெப்டியூன் கிரகங்களை காண தொலைநோக்கி தேவைப்படும். 2022 ஆம் ஆண்டுக்கு பிறகு பூமிக்கு மிக அருகில் வரும் செவ்வாய் கிரகத்துடன் பல கிரகங்களை ஒரே நேரத்தில் காணும் அரிய வாய்ப்பை இந்த கிரக அணிவகுப்பு நமக்கு வழங்குகிறது.