கைலாசாவுடன் ஒப்பந்தம் செய்த பராகுவே அமைச்சர் பதவி நீக்கம்

December 1, 2023

நித்தியானந்தா உருவாக்கிய கைலாசா நாட்டுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பராகுவே அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த அக்டோபர் 16ஆம் தேதி, பராகுவே நாட்டின் வேளாண் அமைச்சர் அர்னால்டோ சாமோரா கைலாசா நாட்டுடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார். தங்கள் நாட்டுக்கு உதவிகள் செய்வதாக கைலாசா பிரதிநிதிகள் தெரிவித்ததை அடுத்து, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக அவர் கூறியுள்ளார். இந்த ஒப்பந்தம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. இது பராகுவே நாட்டில் கடும் விமர்சனங்களை எழுப்பியது. எனவே, கைலாசா என்ற கற்பனை […]

நித்தியானந்தா உருவாக்கிய கைலாசா நாட்டுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பராகுவே அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த அக்டோபர் 16ஆம் தேதி, பராகுவே நாட்டின் வேளாண் அமைச்சர் அர்னால்டோ சாமோரா கைலாசா நாட்டுடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார். தங்கள் நாட்டுக்கு உதவிகள் செய்வதாக கைலாசா பிரதிநிதிகள் தெரிவித்ததை அடுத்து, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக அவர் கூறியுள்ளார். இந்த ஒப்பந்தம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. இது பராகுவே நாட்டில் கடும் விமர்சனங்களை எழுப்பியது. எனவே, கைலாசா என்ற கற்பனை தேசத்துடன் ஒப்பந்தத்தில் ஈடுபட்ட வேளாண் அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu