கனமழை காரணமாக சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடம் கடந்த மூன்றாம் தேதி முதல் மூடப்பட்டது.
சென்னையில் மிச்சாங் மழை காரணமாக பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடம் மூடப்பட்டிருந்தது. இது தற்போது சரி செய்யப்பட்டு இன்று காலை முதல் பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பயணிகள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு தற்போது மெட்ரோ நிர்வாகம் தனது எக்ஸ் தளத்தில் அறிவுறுத்தி உள்ளது.