பாம்பிடோ மையத்தில் 5 ஆண்டுகள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பாரீசில் அமைந்துள்ள பிரபலம் பெற்ற பாம்பிடோ மையம், அதன் தனித்துவமான கட்டிடக்கலை மற்றும் அரிய ஓவியங்களுக்காக பரவலாக அறியப்படுகிறது. இதில் 1,40,000 ஓவியங்களும் பழங்கால பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 1977-ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம், வருடத்திற்கு 32 லட்சம் பேர் பார்வையிடுகின்றனர், அதில் உள்நாட்டினர் மட்டுமல்லாமல், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அடங்குவார்கள்.
இந்நிலையில், இந்த அருங்காட்சியகம் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பராமரிப்பு பணிகள் 5 ஆண்டுகள் நீடிக்கும், மற்றும் 2030-ம் ஆண்டு மீண்டும் பொதுமக்களுக்கு திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சுற்றுலாப் பயணிகளிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.