பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா சாதனை படைத்துள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ராவின் சாதனை இந்திய விளையாட்டு வரலாற்றில் ஒரு பொற்காலத்தைத் தொடங்கி வைத்துள்ளது. பிரான்சைச் சேர்ந்த பிரித்திகா பவாடேவை 4-0 என்ற நேர் செட்டில் வீழ்த்தி, ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய பெண் டேபிள் டென்னிஸ் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார். கடந்த டோக்கியோ ஒலிம்பிக்ஸில் ரவுண்ட் ஆஃப் 32 வரை முன்னேறிய மனிகா, தற்போது தனது சாதனையை மேலும் உயர்த்தி, இந்திய டேபிள் டென்னிஸின் பெருமையை உலகளவில் பரப்பியுள்ளார்.