பாரிஸ் ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
பாரிஸில் 33 வது ஒலிம்பிக் போட்டி கோலாகலமாக நேற்று இரவு 11 மணி முதல் தொடங்கியுள்ளது. பொதுவாக ஒலிம்பிக் திருவிழா அதிகாரப்பூர்வமாக தொடங்கும் முன்பே சில போட்டிகள் நடைபெறும். அந்த வகையில் வில்வித்தை தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்றது. இதில் ஆடவர் அணிகளுக்கான தகுதி சுற்றுப்போட்டி 12 அணிகள் இடையே நடைபெற்றது. இதில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 2013 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தை பிடித்து காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதில் தென்கொரியா அணி ம முதலிடத்தையும், பிரான்ஸ் இரண்டாவது இடத்தையும், சீனா நான்காவது இடத்தையும் பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
அதேபோன்று மகளிர் அணிகளுக்கான தகுதி சுற்றுப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 1983 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தை பிடித்து காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது.