பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான ஆண்கள் இந்திய ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 26 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை பாரிசில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய ஆண்கள் ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 16 பேர் கொண்டுள்ள இந்த அணியில் ஹர்மன் பிரீத் சிங் கேப்டன் ஆகவும், ஹர்திக் சிங் துணை கேப்டன் ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் ஐந்து வீரர்கள் முதல்முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இந்திய அணி ஜூலை 27ஆம் தேதி தனது முதல் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்ள உள்ளது. ஜப்பானில் கடந்த முறை நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆண்கள் அணி வெண்கல பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது