பார்லே ஜி, மொனாக்கோ, மெலடி ஆகிய பிஸ்கட்டுகளை விற்பனை செய்யும் பார்லே நிறுவனத்தின் வருடாந்திர வருவாய் 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த உணவு நிறுவனம், 2 பில்லியன் விற்பனை மதிப்பை எட்டுவது இதுவே முதல் முறையாகும். கடந்த ஆண்டு, 1 பில்லியன் இலக்கைத் தாண்டிய 2வது இந்திய உணவு நிறுவனமாக பார்லே அடியெடுத்து வைத்தது குறிப்பிடத்தக்கது.
2022-ம் நிதி ஆண்டில், நிறுவனத்தின் நிகர விற்பனை 9% உயர்ந்து, 16202 கோடியாக பதிவாகியுள்ளது. ஆனால், நிறுவனத்தின் லாபம் 81% குறைந்து 256 கோடியாக பதிவாகியுள்ளது. முந்தைய ஆண்டில், இவை முறையே 14923 கோடியாகவும், 1366 கோடியாகவும் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் விநியோகத்தை 12% விரிவாக்கம் செய்ததே வளர்ச்சிக்கான முக்கியக் காரணம் என்று நிறுவனத்தின் மூத்த அதிகாரி மயங்க் ஷா தெரிவித்துள்ளார்.