பார்லே நிறுவனத்தின் டிஜிட்டல் மாற்றத்தை முன்னிறுத்தி ஐபிஎம் மற்றும் பார்லே நிறுவனங்கள் கூட்டணியில் இணைந்துள்ளன.கடந்த 2014ஆம் ஆண்டு முதல், ஐபிஎம் நிறுவனம் பார்லே நிறுவனத்துடன் கூட்டணியில் இணைந்து பணியாற்றி வருகிறது. பார்லே நிறுவனத்தின் செயல்பாட்டு திறனை அதிகரிக்க இந்த கூட்டணி அமைக்கப்பட்டது. தற்போது, கிளவுட் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்ப வளர்ச்சிகளை முன்னிறுத்தி, இந்தக் கூட்டமைப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஐபிஎம் பார்லே இடையிலான கூட்டணி மற்றும் ஒத்துழைப்பு நீட்டிக்கப்பட்டது குறித்து இரு நிறுவனங்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளன. பார்லே நிறுவனத்தின் டிஜிட்டல் யுக வளர்ச்சிக்கு இந்த கூட்டணி மிகவும் துணை புரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.