வருகின்ற ஜனவரி 31ஆம் தேதி பாராளுமன்றத்தில் இந்த ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.
ஆண்டுதோறும் பாராளுமன்றம் மூன்று முறை கூடுகிறது. அதில் ஆண்டின் தொடக்கத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும். அவ்வகையில் இந்த ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31ஆம் தேதி தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்ட தொடர் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இரு அவைகளில் கூட்டத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையாற்ற உள்ளார். இதன் பின்பு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். அதனை தொடர்ந்து பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. மேலும் இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் பட்ஜெட் முழுமையாக தாக்கல் செய்யப்படாது. அதற்கு பதிலாக இடைக்கால பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் உள்ளிட்ட அலுவல்கள் ஒன்பதாம் தேதி வரை நடைபெற உள்ளது.