சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நாடாளுமன்ற குழு பஹ்ரைன் சென்றுள்ளது.
நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியத்தின் 146-வது கூட்டம் மற்றும் அது தொடர்பான கூட்டங்கள் பஹ்ரைனில் உள்ள மனாமாவில் இன்று தொடங்கி வரும் புதன்கிழமை வரை நடைபெற உள்ளன. இதில் உலகம் முழுவதிலும் இருந்து 110 நாடாளுமன்றங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் இக்கூட்டத்தில் பங்கேற்க மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் இந்திய நாடாளுமன்ற பிரதிநிதிகள் நேற்று மனாமா சென்றடைந்தனர்.
ஐபியுவின் ஆசிய-பசிபிக் குழு கூட்டமும் இன்று நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் இந்தியப் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். ஐபியு கூட்டத்தில் நாளை நடைபெறும் பொது விவாதத்தில் ஓம் பிர்லா பங்கேற்கிறார்.