காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பகுதி நேர ரத்து

காரைக்கால் பணிமனையில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணியின் காரணமாக காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்சி கோட்டம் காரைக்கால் பணிமனையில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணியின் காரணமாக சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி தஞ்சாவூரில் இருந்து வரும் 28,29, 30 மற்றும் ஜூலை 1,2,3 ஆகிய தேதிகளில் காரைக்கால் செல்லும் சிறப்பு ரயில் நாகர்கோவில் காரைக்கால் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் திருச்சியில் இருந்து […]

காரைக்கால் பணிமனையில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணியின் காரணமாக காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருச்சி கோட்டம் காரைக்கால் பணிமனையில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணியின் காரணமாக சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி தஞ்சாவூரில் இருந்து வரும் 28,29, 30 மற்றும் ஜூலை 1,2,3 ஆகிய தேதிகளில் காரைக்கால் செல்லும் சிறப்பு ரயில் நாகர்கோவில் காரைக்கால் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் திருச்சியில் இருந்து மேற்கண்ட தேதிகளில் இருந்து காரைக்கால் செல்லும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் நாகர்கோவில் - காரைக்கால் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோன்று திருச்சியில் இருந்து காரைக்கால் செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் நாகர்கோவில் - காரைக்கால் இடையே மேற்கூறிய தேதிகளில் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

இதேபோன்று எர்ணாகுளத்தில் இருந்து ஜூலை 1ம் தேதி புறப்பட்டு காரைக்கால் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் நாகப்பட்டினம்- காரைக்கால் இடையே ரத்து செய்யப்படுகிறது. எர்ணாகுளத்தில் இருந்து ஜூலை 2ம் தேதி புறப்பட்டு காரைக்கால் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் நாகர்கோவில் - காரைக்கால் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் ஜூலை 2ம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து காரைக்கால் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நாகப்பட்டினம் - காரைக்கால் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu