மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்

February 21, 2024

மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினர் நீண்ட காலமாக கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்பு வழங்குவதில் 10 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்று போராடி வந்தனர். இந்நிலையில் கடந்த அக்டோபரில் மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம் தீவிரம் அடைந்தது. இதனை அடுத்து இதே சமூகத்தைச் சேர்ந்த மனோஜ் சராங்கி பாட்டில் அக்டோபர் 25ஆம் தேதி முதல் சாகும் வரை […]

மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினர் நீண்ட காலமாக கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்பு வழங்குவதில் 10 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்று போராடி வந்தனர். இந்நிலையில் கடந்த அக்டோபரில் மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம் தீவிரம் அடைந்தது. இதனை அடுத்து இதே சமூகத்தைச் சேர்ந்த மனோஜ் சராங்கி பாட்டில் அக்டோபர் 25ஆம் தேதி முதல் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். இதனை அடுத்து பிற சமூகத்தினருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்திருந்தார். தற்போது இதுகுறித்து ஓய்வு பெற்ற நீதிபதி சுக்ரி தலைமையிலான குழு ஆய்வு செய்து அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது. அக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மராத்தா சமூகத்தினருக்கு அரசு வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா மகாராஷ்டிரா சட்டப் பேரவையில் நேற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu