பிரேசிலில் ஏற்பட்ட விமான விபத்தில் 62 பேர் பலியாகியுள்ளனர்.
பிரேசிலில் உள்ள சாவ் பாலோ எனும் மாகாணத்தில் வியோ பாஸ் என்ற விமானம் 62 பயணிகளை ஏற்றுக்கொண்டு பயணம் செய்தது. அப்பொழுது விண்ஹெடோ என்றும் நகரை கடக்கும்போது விமானம் நிலை தடுமாறி கீழே விழுந்து வெடித்தது. இதையடுத்து அதில் பயணம் செய்த 62 பேர் பலியாகி உள்ளனர் என்று உள்ளூர் தீயணைப்பு படை உறுதி செய்துள்ளது. இந்த விமானம் நடுவானில் கட்டுப்பாட்டை இழந்து சுற்றியதாகவும் பின்னர் விண்ஹெடோ நகரில் உள்ள வீடுகள் மீது தலைக்குப்புற விழுந்து வெடித்தது என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை நெதர்லாந்தை சேர்ந்த செய்தி நிறுவனம் ஒன்று படம் பிடித்துள்ளது. அதனை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் விமானத்தின் ஒரு பெரிய பகுதியில் தீப்பிடித்து பின்னர் விமானம் முழுக்க பரவி கரும்புகை வானத்தை நோக்கி எழும்புவதாக காட்டப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து பிரேசில் அதிபர் லூயிஸ் சில்வா வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.