இந்தியாவிலேயே முதல் முறையாக கேரளாவில் இருந்து துபாய்க்கு பயணிகள் கப்பல் இயக்கப்படும் என்று மந்திரி அகமது தேவர்கோவில் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவது பற்றி கேரள அரசு ஆலோசித்து வருவதாக மாநில சிறுதுறைமுகங்கள் துறை மந்திரி அகமது தேவர்கோவில் தெரிவித்தார். கேரளாவின் பைபோர் துறைமுகத்தில் இருந்து துபாய்க்கு கடல் வழியாக செல்ல 4 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டும். ஒரு பயணிகள் கப்பல் மணிக்கு 35 கிலோ மீட்டர் தூரம் சென்றால் பைபோரில் இருந்து துபாய் சென்றடைய 3½ நாட்கள் ஆகும்.
இதற்கு கட்டணம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையே ஆகும். கப்பல் பயணத்தில் பயண நேரம் அதிகமானாலும், கட்டணம் மிகவும் குறைவாக இருக்கும் என்று கப்பல் நிறுவனத்தினர் தெரிவித்தனர்.