அக்டோபர் மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை 29% உயர்வு

November 12, 2022

இந்தியாவில், கடந்த அக்டோபர் மாதத்தில், பயணிகள் வாகன விற்பனை 29% உயர்ந்துள்ளது. அக்டோபர் மாதம் என்பது இந்தியாவை பொறுத்தவரை, விழா காலம் என்பதால் அந்த மாதத்தில் அதிக விற்பனை பதிவாகும். நடப்பு ஆண்டு அக்டோபர் மாதத்தில், மொத்தமாக, 291113 பயணிகள் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 226353 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பயன்பாட்டு வாகனங்கள் ரகத்தில், பயணிகள் வாகனங்கள் 140926 என்ற எண்ணிக்கையில் வாங்கப்பட்டுள்ளன. இருசக்கர வாகனங்கள் விற்பனையில், ஸ்கூட்டர் […]

இந்தியாவில், கடந்த அக்டோபர் மாதத்தில், பயணிகள் வாகன விற்பனை 29% உயர்ந்துள்ளது. அக்டோபர் மாதம் என்பது இந்தியாவை பொறுத்தவரை, விழா காலம் என்பதால் அந்த மாதத்தில் அதிக விற்பனை பதிவாகும். நடப்பு ஆண்டு அக்டோபர் மாதத்தில், மொத்தமாக, 291113 பயணிகள் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 226353 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பயன்பாட்டு வாகனங்கள் ரகத்தில், பயணிகள் வாகனங்கள் 140926 என்ற எண்ணிக்கையில் வாங்கப்பட்டுள்ளன. இருசக்கர வாகனங்கள் விற்பனையில், ஸ்கூட்டர் ரக வாகன விற்பனை 7% உயர்ந்து, 512761 ஆக பதிவாகியுள்ளது. மோட்டார் சைக்கிள் ரக வாகன விற்பனை 102095 ஆக பதிவாகியுள்ளது. மூன்று சக்கர வாகன விற்பனை 70% உயர்ந்து, 54154 ஆக பதிவாகியுள்ளது. வாகன விற்பனையில் ஏற்பட்டுள்ள உயர்வு குறித்து, இந்திய வாகன உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் வினோத் அகர்வால் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu