ஜனவரி மாத பயணிகள் வாகன விற்பனையில் உச்சம்

February 14, 2024

இந்தியாவில், கடந்த ஜனவரி மாதத்தில், பயணிகள் வாகன விற்பனையில் புதிய உச்சம் பதிவாகியுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் பதிவாகும் அதிகபட்ச பயணிகள் வாகன விற்பனையாக இது குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய வாகன உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளின் படி, பின்வரும் தகவல்கள் கூறப்பட்டுள்ளன. கடந்த ஜனவரியில் மொத்த பயணிகள் வாகன விற்பனை 393074 எண்ணிக்கையில் பதிவாகியுள்ளன. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 14% உயர்வாகும். மூன்று சக்கர வாகன விற்பனை 9% உயர்ந்து 53537 ஆக உள்ளது. மேலும், […]

இந்தியாவில், கடந்த ஜனவரி மாதத்தில், பயணிகள் வாகன விற்பனையில் புதிய உச்சம் பதிவாகியுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் பதிவாகும் அதிகபட்ச பயணிகள் வாகன விற்பனையாக இது குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய வாகன உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளின் படி, பின்வரும் தகவல்கள் கூறப்பட்டுள்ளன. கடந்த ஜனவரியில் மொத்த பயணிகள் வாகன விற்பனை 393074 எண்ணிக்கையில் பதிவாகியுள்ளன. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 14% உயர்வாகும். மூன்று சக்கர வாகன விற்பனை 9% உயர்ந்து 53537 ஆக உள்ளது. மேலும், இருசக்கர வாகன விற்பனை 26% உயர்ந்து, 1495183 அளவில் பதிவாகியுள்ளது. மேலும், வாகன உற்பத்தி அளவு 2328329 அளவில் பதிவாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu