கடந்த 2016 ஆம் ஆண்டு, பதான்கோட் இந்திய விமானப்படை தளத்தில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலை நடத்திய சாஹித் லாட்டிஃப் என்ற பயங்கரவாதி பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்திய உளவுத்துறை அதிகாரிகள் இதனை உறுதி செய்துள்ளனர்.
எந்த இயக்கத்தையும் சாராமல், தனிநபர் பயங்கரவாதி என்ற பெயரில் லாட்டிஃப் அறியப்பட்டார். பாகிஸ்தானில் உள்ள மசூதிக்குள் வைத்து, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் இந்தியாவில் நடத்தப்பட்ட பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.