இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 12 அணிகள் பங்கேற்கும் 10வது புரோ கபடி லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் பல்வேறு நகரங்களில் புரோ கபடி லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் அகமதாபாத், பெங்களூர், புனேயை தொடர்ந்து நான்காவது கட்ட ஆட்டம் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் முதல் மூன்று ஆட்டத்தில் மூன்று முறை சாம்பியன் ஆன பாட்னா பைரேட்ஸ் அணி தமிழ் தலைவாஸ் அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் எதிரணியை ஒரு முறை ஆல் அவுட் செய்ததுடன் முதல் பாதியில் 20- 21 என்ற கணக்கில் பின்தங்கி இருந்தனர். பின்னர் பாட்னா வீரர்கள் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் தமிழ் தலைவாஸ் அணியினை இரண்டு முறை ஆல் அவுட் செய்து புள்ளிகளை திரட்டினர். ஆட்டத்தின் முடிவில் பாட்னா அணி 46- 33 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது. தற்போது நடைபெற்றுள்ள ஐந்தாவது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 2 வெற்றி 3 தோல்வி என்று 10 புள்ளிகள் பெற்று 11 வது இடத்தில் உள்ளது. பாட்னா அணி 3 வெற்றி 3 தோல்வி என்று 17 புள்ளியுடன் 6வது இடத்தில் நீடிக்கின்றது.














