"தமிழ்நிலம் சேவையில் தொழில்நுட்ப பணிகள் காரணமாக பட்டா மாற்றம் 4 நாட்கள் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின் நில அளவை மற்றும் நில வரி துறையின் இயக்குனர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் "தமிழ்நிலம்" என்ற இணையதள சேவையில் விவசாயிகளின் விவரப் பதிவேட்டினைப் பற்றிய தொழில்நுட்பப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால், 28-ஆம் தேதி (இன்று) காலை 10 மணி முதல் 31-ஆம் தேதி மாலை 4 மணி வரை, இந்த இணையவழி பட்டா மாற்ற சேவைகள் (https://tamilnilam.tn.gov.in/Revenue/ மற்றும் https://eservices.tn.gov.in/eservicesnew/index.html) தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.