சென்னை கடற்கரையில் இருந்து பட்டாபிராமுக்கும், பட்டாபிராமிலிருந்து ஆவடிக்கும் புறப்படும் ரயில்கள் இன்று மற்றும் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
பட்டாபிராமிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு அதிகாலை 3.20 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் நாளை மற்றும் நாளை மறுநாள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோன்று பட்டாபிராமிலிருந்து சென்ட்ரலுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் இயக்கப்படும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக பட்டாபிராம் இருந்து சென்ட்ரலுக்கு 3.50 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதேபோன்று ஆவடியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு அதிகாலை 3.50 மற்றும் 4 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. இந்த தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. மேலும் பட்டாபிராமிலிருந்து சென்னை கடற்கரைக்கு இரவு 10.25 மணிக்கு செல்லும் மின்சார ரயில் ஆவடி வரை மற்றும் இயக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.