29 April 2022, குறு,சிறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் நேற்று நடந்த சட்டப்பேரவையில் பட்டுவளர்ச்சி மற்றும் கைவினைப்பொருட்கள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்ட்டுள்ளார்.தரமான பட்டுக்கூடு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் தனி பட்டுப்புழு வளர்ப்பு மனை அமைப்பதற்காக 500 பட்டு விவசாயிகளுக்கு ஒரு மனைக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.6 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படும்.மேலும்,நவீன பட்டுப்புழு வளர்ப்பு தளவாடங்கள், பண்ணை உபகரணங்கள் பட்டுக் கூடுகளின் தரத்தை அதிகரிக்கும் வகையில்1,000 பட்டு விவசாயிகளுக்கு ரூ.5 கோடியே 25 லட்சம் மதிப்பில் நிதி ஒதுக்கிடபடும்.அதிக மகசூல் தரும் மல்பெரி ரகங்கள் நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ஏக்கருக்கு ரூ.10,500 வீதம் 5 ஆயிரம் ஏக்கருக்கு ரூ.5 கோடியே 25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.ரூ.1 கோடி மதிப்பில் மரச்சிற்ப கைவினைஞர்களின் நலனுக்காக சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் பல்வேறு வசதிகளுடன் மரச்சிற்ப கைவினைக் கிராமம் அமைக்கப்பட்டு,தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள், கோயில்கள், வரலாற்றுச் சின்னங்கள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை கைவினைப் பொருள்கள் மூலம் நினைவு பரிசுகளாக உற்பத்தி செய்து சுற்றுலா பயணிகளுக்காக சந்தைப்படுத்தப்படும் என்றும் அறிவிப்பில் தெரிவித்தார்.