புது டெல்லியில் ஜனவரி 22 ஆம் தேதி பால் புரஸ்கர் விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்க உள்ளார்.
ஆண்டுதோறும் 5 முதல் 18 வயதிற்கு உட்பட்ட கலாச்சாரம், வீரதீரம், புதுமை, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், சமூக சேவை, விளையாட்டு உள்ளிட துறைகளில் சாதனை புரிந்த சிறுவர், சிறுமியர்களுக்கு பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் பாரஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகளில் ஒரு பதக்கமும், சான்றிதழும் அரசு தரப்பிலிருந்து வழங்கப்படுகிறது இந்த வருடத்திற்கான பால்புரஸ்கார் விருதுகளை 19 குழந்தைகளுக்கு ஜனவரி 22ஆம் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்க உள்ளார். இம்முறை 18 இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், இரண்டு முன்னேற்றத்திற்கு ஆர்வமுள்ள மாவட்டங்கள் ஆகியவற்றிலிருந்து 9 சிறுவர்கள் மற்றும் 10 சிறுமியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.