ஃபிளிப்கார்ட்டின், பிக் பில்லியன் டேஸ் விற்பனை 2022 மீண்டும் தொடங்கியுள்ளது. இதற்காக Paytm ஆப் பிரத்யேக அனுமதி வழங்கியுள்ளது. Paytm பயன்பாட்டில் உள்ள ஷாப்பிங் பிரிவில் உள்ள Flipkart ஐகானைக் கிளிக் செய்து ஷாப்பிங் செய்யலாம் என அந்நிறுவனம் ௯றியுள்ளது.
Paytm ஒரு டிஜிட்டல் பேமெண்ட்ஸ் நிறுவனமாகும். இது Paytm UPI, Paytm Wallet, Paytm போஸ்ட்பெய்ட், நெட்-பேங்கிங் மற்றும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் என பலவிதமான கட்டண விருப்பங்களை வழங்குகிறது. Paytm சூப்பர் ஆப் ஆனது பில் செலுத்துதல் அல்லது காப்பீடு, கல்விக் கட்டணம் செலுத்துதல், மருந்து விநியோகம், ஆய்வக சோதனைகள் மற்றும் ஷாப்பிங் போன்ற நிதிச் சேவைகள் என அனைத்துத் தேவைகளையும் ஒரே தளத்தில் கொண்டுள்ளது. தற்போது தி பிக் பில்லியன் டேஸ் விற்பனைக்காக Paytm தனது பேமெண்ட் பார்ட்னராக பிளிப்கார்ட்டுடன் ஒரு கூட்டாண்மையை அறிவித்துள்ளது.
இது குறித்து, இந்த பண்டிகைக் காலத்தில் ஃபிளிப்கார்ட் மற்றும் பேடிஎம் கூட்டாண்மையானது அனைவரின் மகிழ்ச்சியை அதிகப்படுத்தும் என்று Paytm தெரிவித்துள்ளது. அதாவது Paytm பயன்பாட்டின் முகப்புப்பக்கத்தில் இருக்கும் Flipkart ஐகான் பயனர்களை Flipkart Lite பக்கத்திற்கு அழைத்துச் செல்லும். அங்கு அற்புதமான டீல்கள் மற்றும் தள்ளுபடிகளுக்கான அணுகலை பயனர்கள் பெறலாம் என தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி Paytm- ன் விரைவான, பாதுகாப்பான மற்றும் தொந்தரவு இல்லாத செக்அவுட்களின் மூலம் வாடிக்கையாளர்கள் பயனடையலாம் எனவும் நிறுவனம் ௯றியுள்ளது.