பேடிஎம் நிறுவனத்தில் 6300 பேர் பணி நீக்கம் செய்யப்படலாம் என தகவல்

May 24, 2024

பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் பணி நீக்கம் மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது. கிட்டத்தட்ட 15 முதல் 20% ஊழியர்களை நீக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, 5000 முதல் 6300 ஊழியர்கள் வரை நீக்கப்படலாம். இதன் மூலம், ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு 400 முதல் 500 கோடி ரூபாய் வரை சேமிப்பாகும். கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், 550 கோடி அளவில் பேடிஎம் நிறுவனத்தின் நிகர இழப்பு பதிவாகியுள்ளது. […]

பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் பணி நீக்கம் மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது. கிட்டத்தட்ட 15 முதல் 20% ஊழியர்களை நீக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, 5000 முதல் 6300 ஊழியர்கள் வரை நீக்கப்படலாம். இதன் மூலம், ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு 400 முதல் 500 கோடி ரூபாய் வரை சேமிப்பாகும்.

கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், 550 கோடி அளவில் பேடிஎம் நிறுவனத்தின் நிகர இழப்பு பதிவாகியுள்ளது. பேடிஎம் பேமெண்ட் வங்கி மீது மத்திய ரிசர்வ் வங்கி மேற்கொண்ட ஒழுங்கு நடவடிக்கைகளின் விளைவாக நிறுவனம் இழப்புகளை சந்தித்து வருகிறது. இந்த சூழலில், பணி நீக்கம் குறித்த தகவல் ஊழியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2023 டிசம்பரில் கிட்டத்தட்ட 1000 ஊழியர்கள் ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் இல் நீக்கப்பட்டனர். தொடர்ந்து வரும் மாதங்களிலும் பணி நீக்கம் ஏற்படும் என கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu