பேடிஎம் காலாண்டு முடிவுகள் வெளியீடு - நிகர இழப்பு 550 கோடியாக உயர்வு

May 22, 2024

பேடிஎம் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் நிகர இழப்பு 550 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் 167.5 கோடி அளவில் மட்டுமே இருந்தது. மேலும், பேடிஎம் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 2.8% சரிவை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு 2464.6 கோடி அளவில் இருந்த வருவாய், கடந்த காலாண்டில் 2267.1 கோடியாக குறைந்துள்ளது. வருடாந்திர அடிப்படையில் பேடிஎம் நிறுவனத்தின் வருவாய் 25% […]

பேடிஎம் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் நிகர இழப்பு 550 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் 167.5 கோடி அளவில் மட்டுமே இருந்தது. மேலும், பேடிஎம் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 2.8% சரிவை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு 2464.6 கோடி அளவில் இருந்த வருவாய், கடந்த காலாண்டில் 2267.1 கோடியாக குறைந்துள்ளது. வருடாந்திர அடிப்படையில் பேடிஎம் நிறுவனத்தின் வருவாய் 25% உயர்ந்து 9978 கோடியாக உள்ளது. ஒட்டுமொத்தமாக, கடந்த 2024 ஆம் நிதியாண்டில் 142.4 கோடி அளவில் நிறுவனத்தின் இழப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் நிதியாண்டில் 1676.5 கோடி அளவில் இழப்பு பதிவாகி இருந்தது. கடந்த பிப்ரவரி மாதத்தில், மத்திய ரிசர்வ் வங்கி பேடிஎம் பேமென்ட் வங்கி மீது எடுத்த நடவடிக்கைகள் காரணமாக இழப்புகள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu