பேடிஎம் நிறுவனம் வங்கி செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கான உரிமத்தை மத்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. இதன் விளைவாக, கடந்த 3 நாட்களில், அதாவது பிப்ரவரி மாதத்தில், பேடிஎம் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 42% வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
பிப்ரவரி மாதத்தில் 3 வர்த்தக தினங்கள் கடந்துள்ளன. இந்த நிலையில், பேடிஎம் நிறுவனம் 20500 கோடி அளவில் இழப்பை பதிவு செய்துள்ளது. மேலும், 3 வது நாளாக, பேடிஎம் நிறுவனத்தின் பங்குகள் லோயர் சர்க்யூட் அளவை எட்டியுள்ளன. நிறுவனத்துக்கான லோயர் சர்க்யூட் அளவு 20% ல் இருந்து 10% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி, பேடிஎம் நிறுவனத்தின் பங்கு மதிப்பு அதன் உச்சபட்ச மதிப்பை விட 56% குறைவாகும். மேலும், ஐபிஓ விலையை விட 80% குறைவாகும்.