பேடிஎம் நிறுவனத்தின் தலைமை அதிகாரியும் வேந்தரும் ஆன பாவிஷ் குப்தா, தனது பதவியில் இருந்து விலகி உள்ளார். பங்குச்சந்தையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பேடிஎம் நிறுவனம் இதனை குறிப்பிட்டுள்ளது. இந்த செய்தியின் எதிரொலியாக, இன்றைய வர்த்தகத்தில் பேடிஎம் பங்குகள் கிட்டத்தட்ட 4.5% அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளன.
நிகழாண்டின் தொடக்கம் முதலே பேடிஎம் நிறுவனத்தின் பங்குகள் தொடர் சரிவை பதிவு செய்து வருகின்றன. பேடிஎம் பேமென்ட் வங்கி மீது ஆர் பி ஐ எடுத்த நடவடிக்கை அதன் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. நிகழாண்டில் மட்டும் கிட்டத்தட்ட 45% வீழ்ச்சியை பேடிஎம் பங்குகள் பதிவு செய்துள்ளன. இந்த நிலையில், வரும் மே 31 முதல் பாவிஷ் குப்தா நிறுவனத்தை விட்டு வெளியேறுவதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், நிறுவனத்தின் செயற்குழுவில் அவர் தொடர்ந்து நீடித்திருப்பார் என சொல்லப்பட்டுள்ளது. இதன் விளைவாக, இன்றைய வர்த்தகத்தில், பேடிஎம் நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 355 ரூபாயாக சரிந்துள்ளது.