ஜப்பானின் முன்னணி கட்டண நிறுவனமான PayPay-ல் உள்ள தனது பங்கை ரூ.2,364 கோடிக்கு விற்பனை செய்ய பேடிஎம் -க்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்த செய்தியை தொடர்ந்து பேடிஎம் பங்குகள் 3% அதிகரித்து 52 வாரங்களில் அதிகபட்சமாக ரூ.1,007 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த காலாண்டில் ரூ.928.30 கோடி நிகர லாபம் ஈட்டிய பேடிஎம் , தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறது. இந்த நிலையில், இந்த பங்கு விற்பனை மூலம் பேடிஎம் -ன் நிதி நிலை மேலும் வலுப்பெறும் என்று கருதப்படுகிறது.