டிஜிட்டல் பரிவர்த்தனை துறையில் முன்னணியில் உள்ள பேடிஎம் நிறுவனம், சராசரியாக மாத பரிவர்த்தனையில் 20% உயர்வை பதிவு செய்துள்ளது. மேலும், நிறுவனம் வழங்கியுள்ள கடன் மதிப்பு 137% உயர்வை பதிவு செய்துள்ளது.
கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில், சராசரியாக, 9.4 கோடி அளவில், பேடிஎம் தளத்தில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை நடைபெற்று உள்ளது. இது வருடாந்திர அடிப்படையில் 20% உயர்வு என, நிறுவனம் சமர்ப்பித்துள்ள பங்குச்சந்தை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடன் வழங்கலில் 137% உயர்வு பதிவாகி, 10710 கோடி மதிப்பில் கடன் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், பல்வேறு தொழில்துறை நிறுவனங்கள் பயன் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, டிஜிட்டல் பண பரிவர்த்தனை துறையில் பேடிஎம் முன்னணியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இன்றைய வர்த்தகத்தில், நிறுவனத்தின் பங்குகள் 2% உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன.














