அரசு தகவல்களை பாதுகாக்க ஜம்மு காஷ்மீர் அரசு அலுவலகங்களில் பென் டிரைவ் மற்றும் வாட்ஸ்அப் பயன்படுத்துவதை தடை செய்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் அரசு அலுவலகங்களில் பென் டிரைவ் மற்றும் வாட்ஸ்அப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டது. அதிகாரப்பூர்வ தகவல்களை பகிர்வதற்காக இனி GovDrive கிளவுட் தளத்தை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒழுங்கு விதிகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த முடிவு மே மாதம் நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் சைபர் தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு எடுத்ததாக கூறப்படுகிறது. மின் துறை அதிகாரிகள் இந்தியா முழுவதும் இரண்டு லட்சம் சைபர் தாக்குதல்களை எதிர்கொண்டு வெற்றிகரமாக தடுக்கப்பட்டதாக மத்திய மின்சார அமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவித்தார்.