தீபாவளி பண்டிகையை விடுமுறையாக அறிவித்தது பென்சில்வேனியா

April 28, 2023

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் இனி தீபாவளி பண்டிகையன்று பொது விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் வசிக்கும் இந்து மக்களும், பிற மதத்தினரும் தீபாவளியை கொண்டாடுவது வழக்கம். அமெரிக்காவில் கடந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையை வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடன் கொண்டாடி இருந்தார். இந்நிலையில், அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் ஆண்டுதோறும் தீபாவளிக்கு பொது விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பென்சில்வேனியாவில் தெற்காசியாவைச் சேர்ந்த 2 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆண்டுதோறும் தீபாவளி […]

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் இனி தீபாவளி பண்டிகையன்று பொது விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் வசிக்கும் இந்து மக்களும், பிற மதத்தினரும் தீபாவளியை கொண்டாடுவது வழக்கம். அமெரிக்காவில் கடந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையை வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடன் கொண்டாடி இருந்தார். இந்நிலையில், அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் ஆண்டுதோறும் தீபாவளிக்கு பொது விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பென்சில்வேனியாவில் தெற்காசியாவைச் சேர்ந்த 2 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வரும் நிலையில், இந்த பண்டிகையை முன்னிட்டு பொது விடுமுறை வழங்குவதற்கான சட்டத்தை அம்மாகாண மேலவையில் செனட்டர்கள் கிரெக் ரோத்மேன் மற்றும் நிகில் சவல் அறிமுகப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து இந்த சட்டம் பென்சில்வேனியா மாகாண மேலவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை செனட்டர் நிகில் சவல் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதன்மூலம் அங்கு தீபாவளிப் பண்டிகை பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu