ஒடிசாவில் தொலைதூர கிராமத்தில் உள்ள மாற்றுத் திறனாளிக்கு ‘ட்ரோன்’ மூலம் ஓய்வூதியம் வழங்கப்பட்டது.
ஒடிசாவின் நுவாபாடா மாவட்டம், பலேஸ்வர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பூட்கபாடா என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஹெட்டா ராம் சத்னாமி. உடல் ஊனமுற்ற இவர், மாநில அரசு ஓய்வூதியம் பெற்று வருகிறார். ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் பெற பலேஸ்வர் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு அடர்ந்த காடு வழியாக சென்று வந்தார். இநிலையில் இம்மாதம் ஒரு ட்ரோன் உதவியுடன் அவரது வீட்டிலேயே அவருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டது.
மருந்துகள், மளிகைப் பொருட்கள், உணவுகள் என பல்வேறு பொருட்களை விநியோகிக்க உலகம் முழுவதும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்தியாவில் ட்ரோன் மூலம் பணம் விநியோகிக்கப்பட்டது ஒரு வகையான முதல் முயற்சியாகும்.