முன்னாள் எம்எல்ஏக்களின் ஓய்வூதியம், மருத்துவப் படி உயர்வு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

April 20, 2023

முன்னாள் எம்எல்ஏக்களின் ஓய்வூதியம் மற்றும் மருத்துவப் படியை உயர்த்தி முதல்வர் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுடைய ஓய்வூதியத்தையும், மருத்துவப் படியையும் உயர்த்த வேண்டுமென உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி, முன்னாள் சட்டப் பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்களுக்குத் தற்போது வழங்கப்பட்டு வரக்கூடிய மாத ஓய்வூதியம் ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாக, கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஜூன் மாதம் முதல் உயர்த்தப்படும். மேலும் குடும்ப […]

முன்னாள் எம்எல்ஏக்களின் ஓய்வூதியம் மற்றும் மருத்துவப் படியை உயர்த்தி முதல்வர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுடைய ஓய்வூதியத்தையும், மருத்துவப் படியையும் உயர்த்த வேண்டுமென உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி, முன்னாள் சட்டப் பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்களுக்குத் தற்போது வழங்கப்பட்டு வரக்கூடிய மாத ஓய்வூதியம் ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாக, கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஜூன் மாதம் முதல் உயர்த்தப்படும். மேலும் குடும்ப ஓய்வூதியம் மாதம் ஒன்றுக்கு ரூ.12,500 என்பது ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்படும். தற்போது ஆண்டு ஒன்றுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவப் படி ரூ.50 ஆயிரம் என்பது ரூ.75 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu