நியூசிலாந்தில் இருந்து அதிகப்படியான மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
நியூசிலாந்து நாட்டை விட்டு அந்நாட்டு மக்கள் அதிக அளவில் வெளியேறி வேறு நாடுகளில் குடிபெயர்ந்து வருகின்றனர். இதற்கு காரணம் அங்கு நிலவும் பொருளாதார மந்த நிலை மற்றும் வேலைவாய்ப்பின்மை சூழல்தான். மேலும் வட்டி விகிதங்கள் உயர்வாலும் மக்கள் அவதியுறுகின்றனர். கடந்த ஓராண்டில் மட்டும் அங்கிருந்து 1,31,200 பேர் வெளியேறி உள்ளனர். வேறு எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த எண்ணிக்கை மிக அதிகமானதாகும். அவ்வாறு வெளியேறிய மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் ஆஸ்திரேலியாவில் குடி பெயர்ந்துள்ளனர். இவர்களில் 80,174 பெயர் அந்நாட்டு குடிமக்களாவர். இது கொரோனா காலத்தில் நியூசிலாந்தை விட்டு வெளியேறிய மக்களை விட இரண்டு மடங்கு அதிகமான அளவு ஆகும்.