2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் அவசரப்பட வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் அவசரப்பட வேண்டாம். ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் திரும்ப பெறப்பட்டதால் உடனடி தேவைக்காகவே ரூ.2,000 நோட்டுகள் வழங்கப்பட்டன. வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற போதிய ஏற்பாடுகள் செய்யப்படும். 2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் இறுதிவரை புழக்கத்தில் இருக்கும். 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற 4 மாத காலம் அவகாசம் உள்ளது. எனவே அனைத்து 2000 ரூபாய் நோட்டுகளும் திரும்ப வரும் என்று நம்புகிறோம் என கூறினார்.