மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மதானி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
கேரளாவில் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானி. இவர் 1998-ல் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 9 ஆண்டுகள் பிறகு விடுதலை செய்யப்பட்டார். தற்போது, அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால், அவர் எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சு விட சிரமமாக இருப்பதால், வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.